ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் உடன் இணையும் புதிய நட்சத்திரப் பட்டாளம் யார் யார் தெரியுமா?  

Estimated read time 1 min read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தையும் நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ளார்.
நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோவில், முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு ஆகியோருடன் பல புதிய முகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு இதில் முதன்மை வில்லனாக நடிக்கிறார்.
இவர்களுடன் அன்னா ரேஷ்மா ராஜன், கோட்டயம் நசீர், சுஜித் சங்கர் மற்றும் வினீத் தட்டில் டேவிட் ஆகிய கேரள நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.

You May Also Like

More From Author