PNG வசதி உள்ள வீடுகளில் LPG கட்: மத்திய அரசு அதிரடி உத்தரவு  

Estimated read time 1 min read

இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோக முறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கில், குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) வசதி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், கட்டாயமாக அந்த இணைப்பிற்கு மாற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தவறும்பட்சத்தில் அவர்களுக்கான LPG சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும்.
மார்ச் 24, 2026 அன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, ‘உங்கள் பகுதியில் பிஎன்ஜி வசதி இருப்பதாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அறிவித்த மூன்று மாதங்களுக்குள் நீங்கள் அந்த இணைப்பிற்கு மாற வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகு, அந்த முகவரிக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிரந்தரமாக நிறுத்தப்படும்’.

You May Also Like

More From Author