சீனாவில் டோக்கன் பயன்பாடு நாளுக்கு 140 டிரில்லியன்

Estimated read time 1 min read

இவ்வாண்டின் மார்ச் திங்கள் வரை, சீனாவில் டோக்கன் பயன்பாடு நாளுக்கு, 140 டிரில்லியனைத் தாண்டியுள்ளது என்று 24ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனத் தேசிய தரவுகள் வாரியத்தின் தலைவர் லியு லியே ஹுங் தெரிவித்தார்.

சீனாவின் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, விரைவான அதிகரிப்பு கட்டத்தில் நுழைந்துள்ளதை, டோக்கன் பயன்பாட்டின் அதிகரிப்பு வெளிக்காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

2025ம் ஆண்டு இறுதிக்குள், சீனாவில் 1 இலட்சம் உயர்தரத் தரவுத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த அளவு 890 PBயை தாண்டி, சீனத் தேசிய நூலகத்தின் மொத்த எண்ணியல் மூலவளங்களை விட 310 மடங்காகத் திகழ்கிறது என்று அறிமுகம் செய்யப்பட்டது.

படம்:VCG

You May Also Like

More From Author