ஜெனீவாவில் நடைபெற்ற வளர்ச்சி உரிமை குறித்த துணை கூட்டம்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 61வது அமர்வின் போது, சமத்துவமின்மையை ஒழித்து வளர்ச்சி உரிமையை நனவாக்குவதை ஊக்குவித்தல் என்ற கருப்பொருளிலான துணை கூட்டத்தை சீன மனித உரிமைகள் மேம்பாட்டு அறக்கட்டளை நடத்தியது. இதில், சீன மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டுள்ளனர்.

உலகளாவிய உரிமைகள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் மார்க் லிமோன் கூறுகையில், சமத்துவமின்மையைக் குறைக்கும் வகையில், வரிவிதிப்பு, சமூகக் காப்புறுதி, பொதுச் சேவைகள் உள்ளிட்டவை தொடர்பான கொள்கைகளில் அனைத்து நாடுகளின் முயற்சிகளும் அவசியம் மட்டுமல்லாமல், சர்வதேச வளவில் மேலும் சமத்துவமான ஒத்துழைப்பு அமைப்பு முறையையும் உருவாக்க வேண்டும் என்றார்.

சீன திபெத்தியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த சமூக பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை தலைவர் யாங் தாவ் கூறுகையில், போக்குவரத்து மற்றும் பொதுச் சேவைகளை மேம்படுத்துதல், பசுமைத் தொழில்களை உருவாக்குதல், சூழலியல் இழப்பீட்டை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், சீனாவின் சிசாங் தன்னாட்சி பிரதேசம், வறுமைக் குறைப்பு மற்றும் சூழலியல் பாதுகாப்பின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது என்றார். இது குடிமக்களின் வருமானத்தை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, வளர்ச்சியின் மூலம் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான நடைமுறையையும் காட்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author