சட்டமன்றத் தேர்தல்: அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்- யாருக்கு வாய்ப்பு.. முழு விவரம்!  

Estimated read time 1 min read

அதிமுக வேட்பாளர் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், முன்னாள் அமைச்சர்கள் 20 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் பொதுச்செயலாளர் இபிஎஸ் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர் முதற்பட்டியலை பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி இன்று (25.3.2026) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலினையின் படி, ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடும் 23 முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
எடப்பாடி தொகுதியில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார். இவரைத் தொடர்ந்து, கழகத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு இந்த முதற்பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author