2026ஆம் ஆண்டு ஏபெக் அதிகாரப்பூர்வமாற்ற மூத்த அதிகாரிகள் கூட்டம்(APEC informal senior officials‘ meeting) டிசம்பர் 11,12 ஆகிய நாட்களில் குவாங்தொங் மாநிலத்தின் ஷென்ட்சென் நகரில் நடைபெற்றது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவே ஜியாகுன் 12ஆம் நாள் கூறுகையில், 2026ஆம் ஆண்டு ஏபெக் தலைமை நாடாக சீனா பதிவு ஏற்றதற்குப் பின் நடத்திய முதலாவது நிகழ்வு இதுவாகும். சீன வெளியுறவு துணை அமைச்சர் மா சௌஷு இக்கூட்டத்தில் பங்கெடுத்தி உரை நிகழ்த்தினார் என்றார்.
மேலும், ஏபெக் உச்சிமாநாடு 2026ஆம் ஆண்டு நவம்பர் 18,19ஆகிய நாட்களில் ஷென்ட்சென் நகரில் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டின் மே திங்கள் முதல், வர்த்தகம், எண்ணியல் பொருளாதாரம், போக்குவரத்து, சுற்றுலா, எரியாற்றல் உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடைய 10 அமைச்சர்கள் கூட்டங்கள் அல்லது உயர்நிலை நிகழ்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
