சீனாவிலுள்ள பதவியை முடித்து நாடு திரும்பும் இந்தியத் தூதருடன் வாங் யீ சந்திப்பு

சீனாவிலுள்ள பதவியை முடித்து நாடு திரும்பும் இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தைச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 26ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது சீன-இந்திய உறவுகளின் வளர்ச்சிக்கு ராவத் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டிய வாங் யீ, கொந்தளிப்பும் மாற்றங்களும் நிறைந்திருக்கும் சர்வதேச நிலைமையை எதிர்கொண்டு, இருநாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்தவும், இருதரப்பும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தல் அல்ல, வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகும் என்ற கொள்கையை கடைபிடிக்கவும், பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இந்தியாவுடன் இணைந்து சீனா பணியாற்றும் என்று தெரிவித்தார்.

தனது பதவிக்காலத்தில் சீனா அளித்த வலுவான ஆதரவிற்கு ராவத் நன்றி தெரிவித்தார். மேலும், இருதரப்பு உறவுகளின் நிலையான வளர்ச்சியைப் பேணுவது, இருதரப்புகளின் நலன்களுக்கும் உகந்தது என்பதோடு அல்லாமல் உலகளாவிய நிலையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author