ஜொங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தின் தொடக்க விழாவில் உரைநிகழ்த்திய டிங் சுயேசியாங்

ஜொங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன அரசவையின் துணைத் தலைமையமைச்சருமான டிங் சுயேசியாங் இக்கூட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், 15ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில், சீனா தற்சார்பு உயர்நிலை அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, பெய்ஜிங்-தியான்ஜின்-ஹெபேய் பகுதி, யாங்சே ஆற்றின் டெல்டா பகுதி, குவாங்டோங்-ஹாங்காங்-மக்காவ் பெரிய வளைகுடாப் பகுதி ஆகிய இடங்களில் மூன்று முக்கிய சர்வதேச அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க மையங்களைக் கட்டியமைத்து, வலுவான அறிவியல் தொழில்நுட்பத் தேசத்திற்கான முக்கிய உத்திநோக்கு ஆதாரத்தை உருவாக்கும் என்றார்.

மேலும், உலகளாவிய அறிவியல் தொழில்நுட்பப் பொதுச் சமூகத்தை கூட்டாகக் கட்டியமைக்க, சீனா அனைத்துத் தரப்புகளும் இணைந்து பணியாற்றும் என்று குறிப்பிட்ட அவர், மேலும் திறந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய புத்தாக்க வலையமைப்பை உருவாக்கவும், பரந்த மற்றும் பன்முக அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேற்கொள்ளவும், மேலும் சமமான மற்றும் சீரான அறிவியல் தொழில்நுட்ப நிர்வாகத்தை ஊக்குவிக்கவும் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author