சீனத் தேசிய வணிக பணிக் கூட்டம் ஜனவரி 10,11 ஆகிய நாட்களில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. 2026ஆம் ஆண்டில், நுகர்வு, போக்குவரத்து, வர்த்தகம், முதலீடு, சர்வதேச விதிகளுடன் இணைப்பது, வெளிநாட்டு முதலீடு, பல தரப்பு பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, அபாய மேலாண்மையை வலுப்படுத்துவது முதலியவற்றை சீனத் தேசிய வணிகத் துறை முக்கியமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
நுகர்வை முக்கியமாக விரைவுபடுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கை இதில் முக்கியமாக நடைமுறைப்படுத்தப்படும். ஷாப் இன் சீனா என்ற வணிக நடவடிக்கை பெருமளவில் நடைமுறைப்படுத்தப்படும். உயர் தர வெளிநாட்டு திறப்பை மேற்கொள்ளும் நிதானத்தை வலுப்படுத்தி, வெளிபுற சூழலில் உறுதியற்ற தன்மையைச் சமாளித்து, பல தரப்பு பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, பல துறைகளில் ஒத்துழைப்புக்கான கூட்டு நலன்களைப் பெற ஊக்குவிக்க வேண்டும். சரக்கு வர்த்தகத்தை மேம்படுத்தி, சேவை வர்த்தகத்தைப் பெரிதும் முன்னேற்றி, எண்ணியல் வர்த்தகத்தையும் பசுமையான வர்த்தகத்தையும் புத்தாக்கம் செய்து, வர்த்தகம் மற்றும் முதலீட்டின் ஒருமைப்பாட்டை விரைவுபடுத்த வேண்டும்.
வெளிநாட்டு முதலீட்டை ஈராக்குமாறு, சேவை துறையின் தற்சார்ப்பு திறப்பை சரியாகவும் சீராகவும் விரிவாக்கி, வெளிநாட்டு முதலீட்டுச் சேவைக்கான உத்தரவாத அமைப்புமுறையை மேம்படுத்த வேண்டும் என்பது இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
