வசந்தகாலத்திலுள்ள சீனா என்ற உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி அபுதாபியில் தொடக்கம்

Estimated read time 1 min read

சீன ஊடகக் குழுமம், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள சீனத் தூதரகம், துபாய்க்கான சீனத் துணை தூதரகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை மையம் ஆகியவை கூட்டாக நடத்திய ‘வசந்தகாலத்திலுள்ள சீனா: சீனாவின் வளர்ச்சி உலகிற்கான வாய்ப்புகள்’எனும் உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி, உள்ளூர் நேரப்படி, மார்ச் 25ஆம் நாள் அபுதாபியில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங், இதில் காணொளியின் மூலம் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், உலகம் சீராக இருந்தால் தான், சீனா சீராக இருக்கும். சீனா சீராக இருந்தால், உலகம் மேலும் சீராக இருக்கும். உயர் நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியை விரிவாக்க வேண்டும். உலக சந்தையைப் பரவலாக விரிவுபடுத்த வேண்டும். சர்வதேச சுழற்சியை மேலும் நன்கு இணைக்க வேண்டும் என்று சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் காலத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். சீனாவின் திறப்புக் கதவு மென்மேலும் திறக்கப்படும் மனவுறுதியை இது மீண்டும் காட்டியுள்ளது. இவ்வாண்டு முதல், சீனாவின் புதிய உயர்தர உற்பத்தித் திறன் வளர்ச்சி செழிப்பாக வளர்ந்துள்ளது. உறுதித் தன்மையுடைய சீனாவில் புதிய வளர்ச்சி வாய்ப்புகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று ஷென் ஹாய்சியோங் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author