ஆற்றல் சேமிப்பிற்கான முதல் ஏ.ஐ பகுப்பாய்வு தளம்பயன்பாட்டிற்கு வருகிறது

Estimated read time 1 min read

சீனா ஆற்றல் சேமிப்புத் துறையில் தரவுப் பகுப்பாய்விற்கான முதல் செயற்கை நுண்ணறிவு தளத்தை  பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

AI தன்னாட்சி கற்றல் மற்றும் பெருந்தரவு பகுப்பாய்வின் அடிப்படையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் தளம், தற்போது குவாங்டாங், யுன்னான், ஹைனான் மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள எட்டு புதிய ஆற்றல் சேமிப்பு மின் நிலையங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும் 2.3 மில்லியனுக்கும் அதிகமான தரவு சேகரிப்புப் அலகுகளைக் கொண்டுள்ளது. இது பல்வேறு வகையான புதிய ஆற்றல் சேமிப்பு உபகரணங்களில் உள்ள குறைபாடுகளையும் ஆபத்துகளையும் நிகழ்நேரத்தில் தொலைவிலிருந்து கண்டறிந்து, அவற்றை உடனடியாகக் கையாள்வதற்கான பராமரிப்புத் திட்டங்களைத் தானாகவே உருவாக்கும் திறன் கொண்டது.

எட்டு மின் நிலையங்களிலும் இந்த AI தளம் ஓராண்டுக்கால சோதனையின் போது உபகரணச் செயலிழப்பு விகிதத்தை 34 சதவீதம் குறைத்ததுடன், அவை விநியோகித்த புதிய ஆற்றலின் மொத்த அளவை சுமார் 30 சதவீதம் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

More From Author