மேலை நாட்டவர்களின் தாக்குதல் அவதூறுக்கு ஆதவம் ஏதுமில்லை

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்டமியற்றல் குழு 19ஆம் நாள் முழு ஒப்புதல் வாக்குகளுடன், தேசியப் பாதுகாப்பைப் பேணிகாக்கும் விதிகள் பற்றிய மசோதாவை ஏற்றுக்கொண்டு, ஹாங்காங் அடிப்படை சட்டத்தின் 23ஆவது விதி சட்டமியற்றல் பணியை சீராக நிறைவேற்றியுள்ளது.

அதன் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்குழு, பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் கேமரூன் உள்ளிட்ட சில மேலை நாட்டவர்கள் ஹாங்காங்கின் வர்த்தக மற்றும் வணிக சூழ்நிலையின் மீது சந்தேகம் தெரிவித்தனர்.

உண்மையில் உள்நோக்கத்துடன் கூறப்பட்ட இந்தத் தாக்குதல் அவதூறுக்கு ஆதவம் ஏதுமில்லை.

தேசியப் பாதுகாப்பைப் பேணிகாக்கும் விதிகள் பற்றிய மசோதா ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஹாங்காங் தேசிய பாதுகாப்பைப் பேணிகாக்கும் சட்டத்துடன் தொடர்புடையது. அத்துடன், ஹாங்காங்கின் நீண்டகாலமான அமைதியையும், ஒரு நாடு இரு அமைப்புகள் என்ற அமைப்பு முறையின் நிதானத்தையும் உறுதிப்படுத்தி வருகிறது.

உள்ளடக்கத்தைப் பார்த்தால், மனித நேய உரிமையை பேணிகாப்பது இவ்விதிகளின் ஒவ்வொரு பிரிவுகளிலும் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலான ஹாங்காங் மக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, இவ்விதிகள் அவர்களின் உரிமை மற்றும் சுதந்திரம், செல்வம் மற்றும் முதலீடு ஆகியவற்றைப் பேணிகாக்கிறது.

பாதுகாப்பு என்பது, வளர்ச்சியின் முன்நிபந்தனையாகும். ஹாங்காங் உலகில் மிக தாராளமான திறப்பு வாய்ந்து பொருளாதார பிரதேசமாகும். ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியும் தொழில் நிறுவனங்களும் ஹாங்காங்கின் வணிக சூழ்நிலை மீது இன்னும் நம்பிகைக் கொண்டுள்ளர்.

2024ஆம் ஆண்டு, ஹாங்காங் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடையும். பொருளாதார அதிகரிப்பு விகிதம் 2.5 முதல் 3.5 விழுக்காடு வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஹாங்காங்கின் சர்வதேச நாணயம், கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக மையம் என்ற தகுநிலை தொடர்ந்து வலிமையாக இருக்கும். இதனால், உலகம். ஹாங்காங்கின் வளர்ச்சியால் மேலதிக வாய்ப்புகளைப் பெறும் என்பதில் ஐயமில்லை. 

Please follow and like us:

You May Also Like

More From Author