சீனாவில் ஷி ச்சின்பிங்கின் தலைமையில் வெற்றியடைந்த வறுமை ஒழிப்புப் போராட்டம் என்னும் புத்தக வெளியீட்டுக்கான கலந்துரையாடல் கூட்டம் அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் கூறுகையில், வறுமை ஒழிப்பு, உலகளாவிய பிரச்சினையாகும். தீவிரமான வறுமையை ஒழித்தல் என்ற கடினமான கடமையை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றி, உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றனர். மேலும், பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங்கின் தலைமையில் வெற்றியடைந்த வறுமை ஒழிப்புப் போராட்டம் என்னும் புத்தகத்தில், தோழர் ஷி ச்சின்பிங்கை மையமாக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, அனைத்து கட்சி உறுப்பினருக்கும், அனைத்து சீன மக்களுக்கும் தலைமை தாங்கி, இலக்காகக் கொண்ட வறுமை ஒழிப்புப் பணியை மேற்கொண்ட வரலாற்றுக் கதைகள் எடுத்துக்கூறப்பட்டுள்ளதோடு, வறுமை ஒழிப்புப் பணி பெற்றுள்ள வரலாற்று தன்மையுடைய சாதனைகளும், வறுமை ஒழிப்பு எழுச்சியும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
