மூன்று நாடுகள் அரசுமுறை பயணத்தின் முதல்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பலத்த மூலோபாய உறவை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ‘இஸ்தானா மெர்டேகா’ அதிபர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் கூடிய பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் உயரிய ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு
