ஜப்பானிய தலைமையமைச்சரின் கூற்றுக்கு ரஷியா நிராகரிப்பு

ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா அம்மையார் 13ஆம் நாள் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு, ரஷிய அரசுத்தலைவர் விளாடிமிர் புதின் இடுருப் தீவில் (ஜப்பானில் எட்டோரோஃபு தீவு என்று அழைக்கப்படுகிறது) பயணம் மேற்கொண்டது குறித்து ஜப்பானிய தலைமையமைச்சர் சனே தகைச்சி மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொட்டேகி ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 2ஆவது உலகப் போரின் விளைவுகள், தொடர்புடைய கூட்டணி நாடுகளின் ஒப்பந்தங்கள் மற்றும் ஐ.நா.வின் சாசனம் ஆகியவற்றின்படி, தெற்கு குரில் தீவுகள் (ஜப்பானில் வடக்குப் பிரதேசங்கள் என அழைக்கப்படுகின்றன) ரஷியாவிற்குச் சொந்தமானவை. இடுருப் தீவு, தெற்கு குரில் தீவுகளின் ஒரு பகுதியாகும். மேலும் அது ரஷியாவிலிருந்து பிரிக்க முடியாத பகுதி எனக் கருதப்படுவதாக தெரிவித்தார். மேலும், தகைச்சி மற்றும் மொட்டேகியின் கருத்துக்கள் அதிர்ச்சியூட்டும் மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பழிவாங்கும் குணம் நிறைந்தவை என்றும், அவை ஜப்பானின் அனைத்து அண்டை நாடுகளிலும் முழு ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையில், சீன வெளியுறவு அமைச்சகம் 14ஆம் நாள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஜப்பானின் யோமியூரி ஷிம்பன் செய்தியாளர் ஒருவர், ரஷிய அரசுத்தலைவர் விளாடிமிர் புதின் இந்தப் பயணம் குறித்து கேள்வி கேட்டார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ சியாகுவன் கூறுகையில், உலகப் பாசிச எதிர்ப்புப் போரில் கிடைத்த வெற்றியின் பலன்கள் உண்மையாக மதிக்கப்பட்டுப் பேணப்பட வேண்டும் என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கெய்ரோ அறிக்கை மற்றும் போட்ஸ்டாம்  அறிக்கை போன்ற சர்வதேச சட்ட ஆவணங்களால் நிறுவப்பட்ட 2ஆவது உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கை ஜப்பான் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author