சீன-கனேட வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 26ஆம் நாளன்று அழைப்பின் பேரில், கனேடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் அம்மையாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

அப்போது அனிதா ஆனந்த் கூறுகையில், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை, சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடுப்புக் கட்டமைப்புடன் தொடர்புடையது என்றார்.

மேலும் ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்து பாதுகாப்பை உத்தரவாதம் செய்வது பல்வேறு தரப்புகளின் நலன்களுக்கும் பொருந்தியது எனக் குறிப்பிட்ட அவர்,  சீனாவுடன் இணைந்து, போர் நிறுத்தத்தை நனவாக்கவும், பிராந்திய அமைதி மற்றும் நிதானத்தைப் விரைவுபடுத்தவும் கனடா பாடுபடும் என்றார்.

வாங்யீ கூறுகையில், போரில் ஈடுபடும் இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதை ஊக்குவிக்க வேண்டும். இதனை நனவாக்கும் பணியில் சீனாவும் கனடாவும் இணைந்து முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றார்.

You May Also Like

More From Author