போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டம் நிறைவு

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 27ஆம் நாள் நிறைவடைந்தது. 4 நாட்களில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், தற்போது ஆசியா மற்றும் உலகம் எதிர்கொண்டுள்ள முக்கிய அறைக்கூவல்கள் மற்றும தீவிர பிரச்சினைகள் குறித்து ஆழமான பரிமாற்றத்தை மேற்கொண்டு முன்மொழிவுகளை வழங்கி பரந்துபட்ட பொது கருத்துக்களை எட்டினர். நடப்பு ஆண்டு கூட்டம் முக்கிய சாதனைகளைப் பெற்றன.

அவற்றில் முக்கிய சாதனையானது ஆசிய பிரதேச ஒத்துழைப்பை முன்னேற்றுவது குறித்து போ ஆவ் ஆசிய மன்ற முன்மொழிவு வெளியிடப்பட்டது. திறப்பு வளர்ச்சியில் ஊன்றி நின்று சரியான திசையில் நடந்து உலகமயமாக்கம், தாராள வர்த்தகம் மற்றும் பலதரப்புவாத ஒத்துழைப்புக்குப் புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வர வேண்டுமென இதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

More From Author