2025ஆம் ஆண்டு வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சிக்கான முதலாவது ஒத்திகை, ஜனவரி 5ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஒத்திகையில், புதுமையான தொழில்நுட்பங்களின் பயன்பாடு, அரங்குகளில் காட்சியமைப்பு ஆகியவற்றுடன் ஒன்றாக சேர்ந்து நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
சீனப் புத்தாண்டு விழா என பொதுவாக அறியப்பட்ட வசந்த விழா, யுனெஸ்கோவின் அருவமான கலாச்சாரப் பாரம்பரிய பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதலாவது வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சி இதுவாகும்.
சீன ஊடகக் குழுமத்தால் தயாரிக்கப்படும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சீனப் பாரம்பரிய பண்பாடுகளுடன் கூடிய பாடல்கள் ஆடல்கள் உள்ளிட்ட பல்வகை நிகழ்ச்சிகளை மக்கள் கண்டு ரசிக்கலாம்.