ஷெல் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு; டீசல் லிட்டருக்கு Rs.25 அதிகரிப்பு  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தாண்டியுள்ளது.
இதன் விளைவாக, நயாரா எனர்ஜியை தொடர்ந்து தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான ஷெல் இந்தியா, இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
பெங்களூருவில் ஷெல் நிறுவனத்தின் எரிபொருள் விலை பின்வருமாறு:
பெட்ரோல்: லிட்டருக்கு ₹7.41 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண பெட்ரோல் ₹119.85 ஆகவும், ‘பவர்’ ரக பெட்ரோல் ₹129.85 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
டீசல்: லிட்டருக்கு ₹25.01 உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண டீசல் ₹123.52 ஆகவும், பிரீமியம் ரக டீசல் ₹133.52 ஆகவும் உயர்ந்துள்ளது.
உள்ளூர் வரிகளைப் பொறுத்து மற்ற நகரங்களில் இந்த விலையில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author