சீன வணிக அமைச்சகம் 2ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் செய்தித் தொடர்பாளர் ஹெ யாடோங், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், கடந்த ஆண்டு முதல், இருநாட்டு அரசு தலைவர்களின் முக்கிய ஒருமித்த கருத்துக்களை வழிகாட்டலாக கொண்டு, சீனாவும் அமெரிக்காவும் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் தொடர்ச்சியான சாதனைகளை பெற்றுள்ளன என்றார். பரஸ்பர மதிப்பு, சமமான உரையாடல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதே கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு மிக சிறந்த வழியாகும் என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன. சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு இயங்குமுறையை இருதரப்பும் தொடர்ந்து சிறப்பாக பயன்படுத்தி, பேச்சுவார்த்தையை வலுப்படுத்தவும், வேறுபாடுகளை உகந்த முறையில் கட்டுப்படுத்தவும், நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும், இருநாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் நிலையான மற்றும் சீரான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சீன-அமெரிக்க பொருளாதார கலந்தாய்வு இயங்குமுறையை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்
You May Also Like
More From Author
“பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் கட்சியில் இருந்து விலகல்
June 21, 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி தடகள பிரவில் முதல் தங்கத்தை வென்ற சீமா குமாரி!
September 25, 2026
கானாவின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்
July 3, 2025
