சீன-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இருப்புப்பாதை திட்டப்பணி பற்றிய மூன்று நாட்டு அரசுகளுக்கிடையிலான உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நிகழ்வு ஜுன் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ஜபரோவ், உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவர் மிர்சியோயேவ் ஆகியோர் காணொளி வழியாக இதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனா, மத்திய ஆசியாவுடன் தொடர்பு கொள்ளும் நெடுநோக்கு திட்டப்பணியாகவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் மூன்று நாடுகள் கூட்டாகப் பங்கெடுத்த சின்னமான திட்டப்பணியாகவும் இந்த இருப்புப்பாதை திகழ்கிறது.
கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானுடன் இணைந்து, இத்திட்டப்பணியின் துவக்கத்துக்கு பல்வேறு ஆயத்த பணிகளைச் செவ்வனே மேற்கொண்டு, மூன்று நாடுகள் மற்றும் மூன்று நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்து, பிரதேசப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்குத் துணைப் புரியும் இந்த இருப்புப்பாதையை வெகுவிரைவில் கட்டிமுடிக்க சீனா விரும்புகிறது என்றார்.
ஜபரோவ் கூறுகையில், முழு பிரதேசத்தின் தொடர்புக்கும், பொருளாதார மற்றும் சமூகப் பரிமாற்றத்துக்கும் இந்த இருப்புப்பாதை முக்கியத்துவம் வாய்ந்தது. இது வெகுவிரைவில் நடைமுறைக்கு வந்து, பிரதேசத்தின் கூட்டு வளர்ச்சிக்குப் புதிய இயக்காற்றலை வழங்க விரும்புவதாக தெரிவித்தார்.
இப்பிரதேசத்தின் நாடுகள் சீனாவுடன் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, நாடுகளுக்கிடையிலான நட்புறவை ஆழமாக்குவதற்கு இந்த இருப்புப்பாதை துணைப் புரியும். இத்திட்டப்பணி பல்வேறு நாடுகளின் நீண்டகால நலன்களுக்குப் பொருந்தியது என்று மிர்சியோயேவ் தெரிவித்தார்.
