சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 28ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில் அசர்பைஜான் வெளியுறவு அமைச்சர் பெலாமொவுடன் சந்திப்பு நடத்தினார்.
இச்சந்திப்பின் போது வளர்ச்சிக்கான நெடுநோக்குத் திட்டத்தின் ஒருங்கிணைப்பை இரு தரப்பும் வலுப்படுத்த வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார். மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான திட்டப்பணிகளைக் கூட்டாகக் கட்டியமைத்து, இரு நாடுகளின் நவீனமயமாக்கக் கட்டுமானத்தை விரைவுபடுத்த ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பெலாமொவ் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய 4 உலகளாவிய முன்மொழிவுகளுக்கு அசர்பைஜான் ஆதரவளிப்பதுடன் உலகளாவிய ஆளுகை நண்பர்கள் குழுவில் சேர விரும்புவதாகத் தெரிவித்தார்.
