சிச்சுவான் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட லீ ச்சியாங்

Estimated read time 1 min read

 

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், மார்ச் 30 முதல் ஏப்ரல் முதல் நாள் வரை சிச்சுவான் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ச்செங்தூ, தேயாங் ஆகிய நகரங்களில் புதிய எரியாற்றல் வளர்ச்சி மற்றும் தொடர்புடைய சாதனங்களின் தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் பற்றி அறிந்து கொண்டார். மேலும், மிங்ஜியாங் ஆற்று ஸிபிங்பூ நீர் சேமிப்புக்கான முக்கிய திட்டப்பணியை மேற்பார்வையிட்டு, குவாங்ஹான் நகரில் கோதுமை மற்றும் வசந்த கால சாகுபடி குறித்தும் அறிந்து கொண்டார்.

பின்னர் லீ ச்சியாங் கூறுகையில், பசுமை வளர்ச்சி மற்றும் எரியாற்றல் வல்லரசு கட்டுமானம் பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய கருத்துக்களை ஆழமாக செயல்படுத்தி, எரியாற்றல் பாதுகாப்பு பற்றிய புதிய நெடுநோக்கு திட்டங்களைச் செவ்வனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், புதிய மின் இணைப்புத் தொகுதியின் கட்டுமானத்தை முன்னேற்றி, எரியாற்றல் கட்டமைப்பு மேம்பாட்டை விரைவுப்படுத்தி, பொருளாதார மற்றும் சமூகத்தின் உயர்தர வளர்ச்சிக்கு வலிமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

You May Also Like

More From Author