ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் காவல்துறையால் நடத்தப்பட்ட படகு போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா துறையை மேம்படுத்துவது மற்றும் இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் 3 நாட்கள் காவல்துறையின் சார்பில் நீர் விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தால் ஏரியில் நடைபெற்ற இந்தப் படகு போட்டியில் 20க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 700க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.