உலகளாவிய கடல் சார் பாதுகாப்பு அறிக்கை

7ஆவது கடல் ஒத்துழைப்பு மற்றும் நிர்வாக மன்றக் கூட்டம் நவம்பர் 6முதல் 8ஆம் நாள் வரை சீனாவின் ஹைய் நன் மாநிலத்தின் சான் யா நகரில் நடைபெற்றது. கடல் சார் பாதுகாப்பு, சர்வதேச விதிகள், சூழலியல் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட கருப்பொருட்கள் குறித்து இதில் கலந்து கொண்ட விருந்தினர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அதே வேளையில், இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட 2025-2026 உலகளாவிய கடல் சார் பாதுகாப்பு அறிக்கையில், சர்வதேச கடல் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், உலகளாவிய கடல் நிர்வாகத்துக்கான வழிமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து இவ்வறிக்கையில் விவாதித்து கூறப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை, ஹுவாயங் கடல் ஆய்வு மையம், தென் சீனக் கடல் ஆய்வகம் உள்ளிட்ட நிறுவனங்களால் கூட்டாக வெளியிடப்பட்டன. இந்த அறிக்கை, உலகளாவிய கடல் சார் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்குத் தென் சீனக் கடலை முக்கிய மாதிரியாகப் பயன்படுத்துகிறது. பாரம்பரிய சர்ச்சைகள் மற்றும் நீர்வழிப் பாதுகாப்பு அபாயங்கள் ஆகியவை நிலவுகின்ற நிலைமையில், கடற்கொள்ளை, காலநிலை பேரழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற பாரம்பரியமற்ற பாதுகாப்புப் பிரச்சினைகளும் ஒன்றுசேர்ந்திருக்கின்றன. தற்போதைய உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு நிலைமை நம்பிக்கையளிப்பதாக இல்லை. நிர்வாக வழிமுறைகளின் சிதைவு பிரச்சினையும் முக்கியக் குறைபாடாகவும் இருக்கிறது என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author