மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், ஊழியர்கள் தங்களின் வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) பல லட்சங்களை இழக்க நேரிடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவாக, புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்படும்போது அடிப்படை ஊதியத்திற்கு (Basic Pay) மட்டுமே நிலுவைத் தொகை (Arrears) வழங்கப்படும்.
ஆனால், HRA போன்ற கொடுப்பனவுகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படுவதில்லை.
இதனால், ஜனவரி 1, 2026 இல் அமலாக வேண்டிய இந்தக் குழுவின் பரிந்துரைகள் தள்ளிப்போனால், ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் பெற வேண்டிய கூடுதல் HRA தொகையை நிரந்தரமாக இழக்க வேண்டியிருக்கும்.
8வது ஊதியக் குழு தாமதத்தால் ரூ.3.8 லட்சம் வரை இழப்பு ஏற்படும் அபாயம்!
