சீனாவில் அஞ்சல் பொருள் துறையின் வளர்ச்சி

சீனத் தேசிய சந்தை ஒழுங்குமுறை நிர்வாகம் மார்ச் 2ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 2020 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சீனாவில் ஒரு நபரின் சராசரி ஆண்டு அஞ்சல் பொருள் பயன்பாட்டு அளவாக 59 இலிருந்து 141ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், சீனத் தேசிய அஞ்சல் பணியகத்தின் கொள்கை மற்றும் ஒழுங்கு முறை துறையின் துணைத் தலைவர் ஷு ஹுவாரொங் கூறுகையில், 2020ஆம் ஆண்டில் 1.1 இலட்சம் கோடி யுவானாக இருந்த அஞ்சல் பொருள் துறையின் வருமானம் 2025ஆம் ஆண்டு 1.8 இலட்சம் கோடி யுவானாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இதன் ஆண்டு சராசரி அதிகரிப்பு 10 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக, பாதுகாப்பு மற்றும் பசுமை பற்றிய 30க்கும் மேலான வரையறைகளைச் சீனா வெளியிட்டு, அஞ்சல் துறையின் வளர்ச்சிக்கு நல்ல சூழ்நிலையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author