சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

Estimated read time 1 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஜூலை 22ஆம் நாள் மணிலாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் சந்திப்பு நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும், இரு நாட்டுத் தலைவர்கள் எட்டிய ஒத்தக் கருத்துக்களை, முழு அரசு மற்றும் பல்வேறு துறைகளின் ஒத்தக் கருத்துக்களாகவும் நடவடிக்கைகளாகவும் செயல்பட வேண்டும் என்றார். மேலும், சீன-அமெரிக்க நெடுநோக்கு நிலைத்தன்மையின் மூலம், உலக அமைதி மற்றும் நிதானத்தை முன்னேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சீன-அமெரிக்க பயனுள்ள தொடர்புகளின் மூலம், சர்வதேச ஒத்துழைப்புகளுக்கு முக்கிய இயக்காற்றலை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தவிரவும், அண்மையில், அமெரிக்காவின் சில எதிர்மறையான கருத்துகள் மற்றும் செயல்கள் பற்றிய சீனாவின் கடும் நிலைப்பாட்டை வாங்யீ எடுத்துக்கூறினார்.

சர்வதேச மற்றும் பிரதேசத்தின் முக்கியப் பிரச்சினைகள் சார்ந்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், இந்தச் சந்திப்பு பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author