வாரணாசி : படகு சேவை நிறுத்தம் – படகோட்டிகள் வாழ்வாதாரம் பாதிப்பு!

Estimated read time 0 min read

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து 20 நாட்களாகப் படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் படகோட்டிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற வாராணசிக்கு வருகை தரும் பக்தர்கள் கங்கையாற்றில் படகு சவாரி செய்வது வழக்கம்.

கனமழை காரணமாக கங்கையாற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் படகு சவாரிக்குக் கடந்த 20 நாட்களாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அசிகாட் மற்றும் நமோகாட் பகுதியில் ஏராளமான படகோட்டிகள், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author