மியான்மரின் அரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மின் ஆங் ஹ்லைங்கிற்கு சீனா வாழ்த்து

மியான்மரின் நாடாளுமன்றம் ஏப்ரல் 3ஆம் நாள் மின் ஆங் ஹ்லைங்கை புதிய அரசு தலைவராக தேர்ந்தெடுத்தது. மியான்மரின் அரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மின் ஆங் ஹ்லைங்கிற்கு சீனா வாழ்த்து தெரிவிப்பதாக அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் அமைதி மற்றும் நிலைதன்மையைப் பேணுவதிலும், வளர்ச்சி மற்றும் செழிப்பை நனவாக்குவதிலும் புதிய மியான்மர் அரசிற்கு சீனா ஆதரவளிக்கிறது என்றார். நான்கு முக்கிய உலகளாவிய முன்னெடுப்புகளைச் செயல்படுத்தவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தர கூட்டு கட்டுமானத்துக்கான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், சீனா-மியான்மர் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானம் மேலதிக நடைமுறை சாதனைகளை பெற்று இருநாட்டு மக்களுக்கும் பயனளிக்கவும், மியான்மருடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author