திருச்சி கிழக்கு வேட்பு மனுவில் இரண்டு குற்றவியல் வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் விஜய். அதேசமயம், பெரம்பூர் வேட்பு மனுவில் அதனைக் குறிப்பிடவில்லை.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்த தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார்.
நேற்று திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் வழங்கினார்.
இந்நிலையில் திருச்சி கிழக்கு வேட்பு மனுவில் இரண்டு குற்றவியல் வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் விஜய். அதேசமயம், பெரம்பூர் வேட்பு மனுவில் அதனைக் குறிப்பிடவில்லை.
இதனை எதிர்க்கட்சிகள் காரணமாகக் காட்டினால், வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி நிராகரிக்கப்பட்டால், “எனக்கு எதிராகச் சதி செய்துவிட்டார்கள்” என விஜய் கூற வாய்ப்பு இருக்கிறது.
April 6 மாலை 6 மணிக்குள், பெரம்பூர் தொகுதியில் திருத்தப்பட்ட மனுவை மீண்டும் தாக்கல் செய்யலாம். மாறாக, பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனு விஜயால் திருத்தப்படாமல் போனால், அவர் வேட்புமனு நிராகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
