சீன சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்முதல் சம்மேளனத்தின் விமான சரக்கு போக்குவரத்து பிரிவு வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனா முழுவதும் 47 சர்வதேச விமான சரக்கு போக்குவரத்து வழித்தடங்கள் திறக்கப்பட்டு, வாரந்தோறும் 118க்கும் மேற்பட்ட இருவழிப் பயண விமானச் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதிதாக திறக்கப்பட்ட வழித்தடங்களில் ஆசிய மற்றும் ஐரோப்பிய வழித்தடங்கள் அதிகம். அவற்றுக்கான வழித்தடங்கள் முறையே 19 மற்றும் 18 ஆகும். மேலும், வட அமெரிக்காவுக்கு 8 வழித்தடங்களும், தென் அமெரிக்காவுக்கு 1 வழித்தடமும், ஆப்பிரிக்காவுக்கு 1 வழித்தடமும் திறக்கப்பட்டது.
இந்த வழித்தடங்களின் மூலம் ஏற்றிச் செல்லப்படும் பொருட்களில், எல்லை கடந்த மின்னணு வணிக சரக்குகள், உயர்நிலை தயாரிப்பு துறையின் சரக்குகள், உயர் கூட்டு மதிப்பு கொண்ட சரக்குகள், மின்னணு பொருட்கள், வாகனங்களின் உதிரி பாகங்கள், இயந்திரங்கள், புத்தம்புதிய பொருட்கள், தனித்துவமான வேளாண் பொருட்கள், உயிரி மருந்துகள், ஆடைகள் ஆகியவை முக்கியமாக உள்ளன.
