ரஷியாவுடன் வர்த்தகத் தொடர்பில் ஈடுபட்டதாகக் கூறி, கனடா நாட்டின் அரசு 20 சீன நிறுவனங்கள் மீது தடை விதிதத்து குறித்து சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் 26ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
கனடாவின் இச்செயலுக்கு சீனா கடும் மனநிறைவின்மை தெரிவித்து, உறுதியாக எதிர்ப்பதாக தெரிவித்தார். இந்த தவறான செயல்களை கனடா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனத் தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சீன நிறுவனங்களின் இயல்பான உரிமைகளையும் நலன்களையும் உறுதியாகப் பேணிக்காக்க, தேவையான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா பாதுகாப்பவையின் அதிகாரத்தைப் பெறாத ஒரு தரப்புவாத தடைகளை சீனா எப்போதும் எதிர்த்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.