அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக்கான சர்வதேச சங்கத்தின் 2024ஆம் ஆண்டு உலக மாநாட்டிற்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக்கான சர்வதேச சங்கத்தின் 2024ஆம் ஆண்டு உலக மாநாட்டிற்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 19ஆம் நாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக்கு சீனா எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வருவதுடன், அறிவுசார் சொத்துரிமை வல்லரசின் கட்டுமானத்தையும், அறிவுசார் சொத்துரிமை லட்சியம் வரலாற்றுத் தன்மையுடைய சாதனைகளைப் பெறுவதையும் முன்னேற்றி வருகிறது என்றார். மேலும், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி, சர்வதேச அறிவுசார் சொத்துரிமையின் பலதரப்பு அமைப்புமுறையை உறுதியாகப் பேணிக்காத்து, உலக அறிவுசார் சொத்துரிமை மேலாண்மை அமைப்புமுறை மேலும் நியாயமான திசையை நோக்கி வளர்ப்பதை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.