சமீபத்திய தரவுகளின் படி, சீனாவில் 2025ஆம் ஆண்டுக்கான திரைப்பட வசூல் 10.12 பில்லியன் யுவானைத் தாண்டியது. வட அமெரிக்க திரைப்படச் சந்தையைத் தாண்டிய இந்த வசூல் சாதனையுடன், சீனா உலகளவில் முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமை வரை, வசந்த விழா விடுமுறை நாட்களில், திரைப்பட வசூல் 8.9 பில்லியன் யுவானை எட்டி, வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்தது. இந்த விடுமுறை நாட்களில், நாடளவில் 170 மில்லியன் பார்வையாளர்கள் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களைக் கண்டுகளித்துள்ளனர்.
ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை ஒரு வாரம் நீடித்த சீனப் புத்தாண்டு விமுறை நாட்கள், சீனத் திரைப்படத் துறைக்கு மிக முக்கியக் காலமாகும். இககாலத்தில் புதிய திரைப்படங்கள் பலவும் ஒரே நேரத்தில் திரையிடப்படுவது வழக்கமாகும். ஜனவரி 29ஆம் நாள் தொடங்கி அடுத்த 6 நாட்களின் தினசரி வசூல் தொடர்ச்சியாக ஒரு பில்லியன் யுவானைத் தாண்டியது.
இவற்றில் சீனப் பராம்பரிய கலாசாரத்தை கருப்பொருளாகக் கொண்டு நே ஜா 2 எனும் அனிமேஷன் படம், இந்த விடுமுறையில் மிக அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, பல புதிய சாதனைகளையும் படைத்துள்ளது.