ஜெர்மனி பிரதமர் யுனிட்ரீ நிறுவனத்தை பார்வையிட்டார்

Estimated read time 1 min read

ஜெர்மனியின் பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸின் தலைமையிலான வணிகப் பிரதிநிதிக் குழு 26ஆம் நாள் வியாழக்கிழமை ஹாங்ஜோ மாநகரைத் தலைமையிடமாக கொண்டுள்ள யுனிட்ரீ நிறுவனத்திற்குச் சென்று பார்வையிட்டது.

வரவேற்பு விழாவில் மனித உருவ ரோபோக்களால் நடத்தப்பட்ட குங்ஃபூ கலை நிகழ்ச்சி, பிரதிநிதிக் குழுவினரை வெகுவாக கவர்ந்த்து.

ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் 2 நாள் பயணமாக புதன்கிழமை பெய்ஜிங்கை வந்தடைந்தார். இதையடுத்து வியாழக்கிழமை மனித உருவ ரோபோ தயாரிப்பு நிறுவனத்தை அவர் பார்வையிட்டார்

சீன ஊடக குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட  2026 வசந்த விழாக் கொண்டாட்ட கலை நிகழ்ச்சியில் குங்ஃபூ ரோபோ முதல்முறையாக பொது வெளியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தையும் சீனப் பராம்பரிய கலாச்சாரத்தையும் ஒருங்கிணைத்து, இந்த மனித உருவ ரோபோக்கள் நடத்திய குங்ஃபூ நிகழ்ச்சி இணையத்தில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

More From Author