சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜெர்மனி அரசுத் தலைவர் ஸ்டெய்ன்மெயர், அக்டோபர் 27 முதல் 31ஆம் நாள் வரை, சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருக்கின்றார். அக்டோபர் 27ஆம் நாள் காலையில், சீனாவின் அன்ஹூய் மாநிலத்தின் ஹெஃபேய் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர், சீனாவில் தனது பயணத்தை மேற்கொள்ள துவங்கினார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் சீனாவில் பயணம் மேற்கொள்வது இதுவே ஆகும்.
இப்பயணத்தின் போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அவருடன் சந்திப்பை நடத்தவுள்ளார். சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் சாவ்லேஜி ஆகிய இருவரும், அவருடன் முறையே பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர். இரு தரப்புறவு, பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் முதலியவை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவுள்ளனர்.
