இவ்வாண்டின் முதல் பாதியில் சீராக வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம்

சீன தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆண்டுக்கு 2 கோடி யுவான் மற்றும் அதற்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு கடந்த ஆண்டை விட 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறையின் பங்களிப்பு 35 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

இக்காலக்கட்டத்தில் சீனாவின் போட்டித்தன்மை வாய்ந்த உபகரணங்கள், ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளன. உபகரணத் துறையில் ஏற்றுமதி விநியோக மதிப்பு கடந்த ஆண்டை விட 18.2 சதவீதம் அதிகரித்து, தொழில்துறை ஏற்றுமதி வளர்ச்சிக்கான பங்களிப்பு சுமார் 50 சதவீதத்தை எட்டியது.

You May Also Like

More From Author