ட்சிங் மிங் விழாக்காலத்தில் ரயில் பயணங்களின் எண்ணிக்கை 9 கோடியே 5 இலட்சம்

Estimated read time 0 min read

சீனாவில் ட்சிங் மிங் விழாவுக்கான சிறப்புப் போக்குவரத்து ஏப்ரல் 3 ஆம் நாள் முதல் தொடங்கி 7 ஆம் நாள் வரை நீடிக்கும்.

இந்நாட்களில் சீனத் தேசியளவில் மேற்கொள்ளப்படும் ரயில் பயணங்களின் எண்ணிக்கை 9 கோடியே 5 இலட்சமாகும்.

நாளொன்றின் சராசரிப் பயண எண்ணிக்கை ஒரு கோடியே 81 இலட்சம் ஆகும். ட்சிங்மிங் விழா நாளான ஏப்ரல் 4 அன்று பயணங்களின் எண்ணிக்கை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டில் இந்த விழாவின் போது, உறவினர்களைச் சந்தித்தல், முன்னோர்களை வழிபடுதல், வசந்த கால சுற்றுலா பயணம் மேற்கொள்தல், இன்பப் பயணங்களின் தேவைகள் ஆகியவை காரணமாக அதிகப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author