கர்நாடகா முதல்வர் சித்தராமையா ராஜினாமா ஏற்பு..!!

Estimated read time 1 min read

கர்நாடக முதல்வர் சித்தராமையா – துணை முதல்வர் டிகே சிவகுமார் இடையே நிலவி வந்த அதிகாரப் போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

2023ல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போதில் இருந்து முதல்வர் பதவிக்கான போட்டி இருவரிடையே எழுந்தது. 3 ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக இருந்து விட்ட நிலையில், காங்கிரஸ் மேலிட அழுத்தத்தினால், நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகையில் வழங்கினார்.

மேலும், கட்சியின் தலைமை வழங்கிய ராஜ்ய சபா சீட்டை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்த அவர், தொடர்ந்து மாநில அரசியலியே கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்து விட்டார்.கவர்னர் சொந்த ஊருக்கு சென்று விட்டதால், சித்தராமையாவின் ராஜினாமா நிலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அம்மாநில கவர்னர் தாவார்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும், புதிய முதல்வர் தேர்வாகும் வரை, சித்தராமையா முதல்வராக தொடர்வார் என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் டிகே சிவகுமார் விரைவில் முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author