தைவான் பிரதேசத்தின் தலைவர் லைய் சிங்தேவின் கூற்று குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் அக்டோபர் 10ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கருத்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், லைய் சிங்தேவின் உரை, தைவான் நீரிணை இரு கரைகளின் வரலாற்று இணைப்பை வேண்டுமென்றே துண்டித்து, இரு கரைகள் ஒன்றை ஒன்று சேராதது என்பதை கூறி, “தைவான் சுதந்திரம்” பற்றிய அவரது நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தைவான், சீனாவின் உரிமை பிரதேசத்தில் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். சீன மக்கள் குடியரசின் அரசு, முழு சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரே ஒரு சட்டப்பூர்வ அரசு ஆகும். லைய் சிங்தேவின் அதிகார வட்டாரம் எவ்வாறு கூறினாலும் செயல்பட்டாலும்,
இரு கரைகள் ஒரே சீனாவைச் சேர்ந்த உண்மையை மாற்ற முடியாது. சீனாவின் ஒன்றிணைப்பு நனவாக்கப்படும் வரலாற்றுப் போக்கினைத் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.