தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37. 56 % வாக்குப்பதிவு!

Estimated read time 0 min read

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37 புள்ளி 56 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37 புள்ளி 56 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42 புள்ளி 45 சதவீதம் வாக்குகளும், நாமக்கலில் 41 புள்ளி 41 சதவீதமும், ஈரோட்டில் 41 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக நீலகிரியில் 32 புள்ளி 62 சதவீதமும், திருநெல்வேலியில் 34 புள்ளி 5 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. சென்னையில் 35 புள்ளி 47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

You May Also Like

More From Author