ஈரானின் புதிய தலைவரை நான் தான் நியமிப்பேன்:டிரம்ப்

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் மார்ச் 5ம் நாள், அமெரிக்க அக்சியொஸ் செய்தி இணையத்துக்கு தொலைப்பேசி மூலம் பேட்டியளித்தார். ஈரானின் உயிரிழந்த அதியுயர் தலைவர் கமேனியின் மகன், புதிய தலைவராகப் பொறுப்பேற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. “ஈரான் புதிய தலைவரின் நியமனத்தில் பங்கெடுக்க வேண்டும்”என்று டிரம்ப் தெரிவித்தார்.

ஈரானில் கமேனி கொள்கையைப் பின்தொடரும் புதிய தலைவர் பதவி ஏற்றால், 5 ஆண்டுகளுக்குள் அமெரிக்கா போருக்கு மீண்டும் திரும்ப வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

ஈரான் டாஸ்னிம் செய்தி நிறுவனம் 5ம் நாள் வெளியிட்ட தகவலின்படி, ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் கூறுகையில், 3 பேர் சேர்ந்து உருவாகும் ஒரு புதிய அமைப்பு, நாட்டின் அதியுயர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முன்,  நாட்டின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கும். ஈரானின் அரசியல் அமைப்பு சட்ட ஒழுங்கின்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author