2026ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சீனப் பொருளாதாரம் பற்றிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழிற்துறை, நுகர்வு, முதலீடு, வெளிநாட்டு வணிகம் உள்ளிட்ட முக்கிய பொருளாதார குறியீடுகள் குறிப்பிட்ட அளவில் உயர்ந்துள்ளன. பொருளாதாரத்தின் நிதானம் மற்றும் வலுவான வளர்ச்சிப் போக்கு சீன மக்களுக்கு நன்மை புரிவதோடு, இவ்வாண்டின் வளர்ச்சி இலக்குகளை நனவாக்குவதற்கு சீரான அடிப்படையும் உருவாக்கியுள்ளது. நிதானமான அடித்தளம் எனவும் எதிர்பார்த்ததை விட, முன்னேற்றம் எனவும் சீனப் பொருளாதாரம் குறித்து வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் மதிப்பிட்டு அது உலகப் பொருளாதாரத்துக்கும் உந்து ஆற்றலைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.
பிரெஞ்சு டசால்ட் சிஸ்டம்ஸ் எனும் தொழில்நிறுவனத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், சீன புதிய தொழில்களின் வளர்ச்சியுடன் எங்கள் நிறுவனமும் வளர்ச்சியடைந்துள்ளது. புத்தாக்கத்தை மையமாகக் கொண்ட இந்த வளர்ச்சி அமைப்பு முறை, சீனப் பொருளாதார கட்டமைப்பின் மாற்றத்தை முன்னெடுப்பதோடு, உலகில் பல்வேறு நாடுகளின் தொழில் மேம்பாட்டுக்கும் உதவி மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றார்.
இவ்வாண்டின் துவக்கத்தில் பன்னாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் சீனாவில் அடுத்தடுத்து பயணம் செய்துள்ளனர். சர்வதேச மூலத்தனங்கள் சீனாவிலுள்ள முதலீட்டை அதிகரித்துள்ளன. சீனாவுடன் முன்னோக்கி செல்வது வளர்ச்சி வாய்ப்புகளுடன் செல்வதாகும். சீனாவில் முதலீடு செய்வது எதிர்காலத்திற்கு முதலீடு செய்வதாகும் என்று அனைவரும் தெளிவாகக் கண்டறிந்தது அதற்கான காரணமாகும்.
