இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சி உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசு லோட்டஸ் திட்டம் 2026 என்ற பிரம்மாண்டமான திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 1,000 இந்திய முதுகலை மாணவர்கள், பிஎச்டி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் போஸ்ட் டாக்டோரல் ஆய்வாளர்களுக்கு ஜப்பானிய முன்னணி பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி செய்ய நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
இளம் ஆராய்ச்சியாளர்களின் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஜப்பானின் அதிநவீன ஆய்வகங்களில் பணிபுரியும் வாய்ப்பை வழங்கவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதற்கும், உலகத்தரம் வாய்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெறுவதற்கும் இந்திய மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
ஜப்பானில் பிஎச்டி படிக்க இந்திய மாணவர்களுக்கு ரூ.25.6 லட்சம் ஸ்காலர்ஷிப்
