ஏப்ரல் 5ஆம் நாள் சீனாவின் ட்சிங் மிங் விழா விடுமுறையின் 2ஆவது நாளாகும். நாடளவில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயணிகளின் பாதுகாப்பான சொகுசான பயணத்தை உத்தரவாதம் செய்ய, சீனப் போக்குவரத்துத் துறை சேவைகளை மேம்படுத்தியுள்ளது.
5ஆம் நாள் சீனாவில் இருப்புப்பாதை மூலம் மேற்கொள்ளப்படும் பயணங்களின் எண்ணிக்கை 1கோடியே 47லட்சமாக எட்டுமென மதிப்பிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும் வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 5கோடியே 84லட்சத்தைத் தாண்டும். இவற்றில் 1கோடியே 40லட்சமானது புதிய எரியாற்றல் வாகனங்களாகும். மேலும், நீர் வழியாக மேற்கொள்ளப்படும் பயணங்களின் எண்ணிக்கை 13லட்சத்து 60ஆயிரத்தை எட்டி கடந்த ஆண்டை விட, 4.3விழுக்காடு அதிகரித்து புதிய உச்சத்தை எட்டுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
