இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: ஒரு டாலர் 92.36 ரூபாயாக வீழ்ச்சி  

Estimated read time 1 min read

சர்வதேச சந்தையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை (மார்ச் 12) அன்று வரலாறு காணாத வகையில் ரூ.92.36 என்ற நிலைக்குச் சரிந்தது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதும், கச்சா எண்ணெய் விலை உயர்வுமே இந்த வீழ்ச்சிக்கு முதன்மையான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
ரூபாய் வீழ்ச்சிக்கு 3 முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு:-
ஈராக் கடல் பகுதியில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது.
இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதி செய்வதால், எண்ணெய் விலை உயர்வு டாலருக்கான தேவையை அதிகரித்து ரூபாயின் மதிப்பைக் குறைக்கிறது.

You May Also Like

More From Author