தேமுதிக-வின் மிக முக்கியமான முகமும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான மீசை ராஜேந்திரன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே அவரோடு நிழலாகப் பயணித்து வந்த இவர், விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு பிரேமலதா விஜயகாந்துக்கும் மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேமுதிக சார்பில் மூன்று முறை தேர்தலில் போட்டியிட்ட மீசை ராஜேந்திரனுக்கு, இந்த முறை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விஜயகாந்தின் வலது கரமாகப் பார்க்கப்பட்ட ஒரு விசுவாசி இப்போது கட்சியிலிருந்து விடைபெற்றது தேமுதிக-வுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படும் நிலையில், “விஜயகாந்தின் உண்மையான தளபதி விலகிவிட்டார்” என சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
