ஜப்பானின் புதிய ரக ராணுவ வெறியின் ஆபத்து

அண்மையில் ஜப்பான் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் படி, ஆயுத ஏற்றுமதியைத் தளர்க்கும் திட்டத்தை வெளியிட ஜப்பான் அரசு திட்டமிடுகின்றது.

ஆயுத ஏற்றுமதி பற்றிய தடுப்பைப் பன்முகமாக நீக்கி, அமைதி அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தும் புதிய நடவடிக்கை இதுவே ஆகும். ஆழமாக மாறி வரும் உலக நிலைமையைச் சந்திக்கும் போது, ஜப்பானின் புதிய ரக ராணுவ வெறி, பிரதேச பாதுகாப்பு மற்றும் நிதானத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது. அருகிலுள்ள நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் விழிப்புணர்வை இது ஏற்படுத்தியது.

ஜப்பானின் புதிய ரக ராணுவ வெறி, தற்காப்பு உரிமை மற்றும் இயல்பான நாடு என்பதை சாக்குப்போக்காக கொண்டு, பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகிய துறைகளில் நுழைந்துள்ளது. ராணுவப் படையை விரிவாக்குவது இதன் சாராம்சமாகும்.

சீனா சட்டத்தின் படி, ராணுவசார்பற்ற மற்றும் ராணுவசார் துறைகளில் தேவைப்படக் கூடும் பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தியுள்ளது. 20 தொடர்புடைய ஜப்பானின் தொழில் நிறுவனங்கள் கட்டுப்பாட்டு பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

ஜப்பான் மீண்டும் ராணுவ வெறியை மேற்கொள்வதையும் அணு ஆயுதங்களைக் கொள்வதையும் தடுப்பது, பிரதேச மற்றும் உலக அமைதியைப் பேணிக்காப்பதற்கு முக்கியத்துவமும் அவசியமுமாகும் என்று சர்வதேச சமூகம் அறிந்துகொண்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author