#BREAKING : ஆதவ் அர்ஜுனா வேட்புமனு ஏற்பு..!

Estimated read time 1 min read

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த தவெக-வைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்காக கூறப்பட்ட காரணங்கள்:

* த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மனைவியின் பெயரில் உள்ள 35 நிறுவனங்களின் பெயர்களை மனுவில் குறிப்பிடவில்லை.

* கையிருப்பாக ரூ.2 கோடி வைத்திருக்கக்கூடாது என்ற ஆட்சேபனை எழுந்துள்ளதால் ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு

* வங்கியில் போடப்பட்டுள்ள FD-யில் இருந்து கிடைக்கும் வருவாயை வேட்புமனுவில் ஆதவ் அர்ஜுனா காட்டவில்லை.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் “ஆதவ் அர்ஜுனா” அவர்களின் வில்லிவாக்கம் தொகுதிக்கான வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

தனது மனைவி தொடர்புடைய 35 நிறுவனங்களை மறைத்ததாக கூறி சுயேட்சைகள் எதிர்ப்பு காரணமாக மறுபரீசீலனை செய்யப்பட்ட நிலையில் மனு ஏற்கப்பட்டது.. அவர் வேட்புமனுவில் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதால் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author